Monday, August 2, 2021

காமராஜர் வாழ்க்கை வரலாறு




காமராஜரின் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம் : 

காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது.

இயற்பெயர் – காமாட்சி 

பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூலை 15, 1903 

பெற்றோர் – குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை 

பிறந்த ஊர் – விருதுநகர்

மருவிய பெயர் – காமராஜர்

கல்வி மற்றும் படிப்பு :

தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.

இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார் . இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

காமராஜரின் அர்ப்பணிப்பு வாழ்க்கை துவங்கிய தருணம் ; 

காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் உரையாற்றுவதை பார்த்து அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சில் தன்னை இணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போடு அதன்படி நடக்க ஆரம்பித்தார் . 

காமராஜரின் சிறை வாழ்க்கை : 

முதன் முதலில் 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சதியாகிரக போராட்டம் தமிழகத்தில் நடந்தது . அதில் பங்கேற்று நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு ஒரு வருட தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

மீண்டும் 1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெற்றார் . மீண்டும் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். மொத்தமாக அவரது வாழ்நாளில் 9 ஆண்டுகள் மக்களுக்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜரின் அரசியல் குரு : 

காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளரும் தலைவருமான சத்தியமூர்த்தியின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் . அவரின் அனைத்து மேடைப்பேச்சினையும் கேட்டு மெய்மறந்து போன அவர் சத்யமூர்த்தியுடன் தனது நல் உறவினை தொடர்ந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜரை செயலாளராக நியமித்தார்.

தமிழக முதல்வர் : 

குலக்கல்வி அப்போது ராஜாஜியின் உத்தரவின் படி இருந்தது ஆனால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருந்தன . இதனால் மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் தனது பலத்தினை இழந்தது. இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியினை துறந்தார். மேலும் தனக்கு பதிலாக சுப்பிரமணியம் என்பவரை நிறுத்தினார். ஆனால் சட்டசபையில் காமராசருக்கு இருந்த செல்வாக்கின் அடிப்படியில் ஓட்டெடுப்பில் வென்று 1953ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆனார்.



மதிய உணவுத்திட்டம் : 

ஒருமுறை தனது அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் எண்ணிக்கை குறித்து அமைச்சர்களிடம் பேசினார் . அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்த அவர் மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார். மேலும் குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டார் .தமிழகத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும் 17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார்.

தொழில்துறையில் வேலைவாய்ப்பு :

தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . அதில் முக்கியமான சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.

இப்படி பல திட்டங்களை கொண்டுவந்து மக்களுக்கு வருமானம் வரும் வழியினையும் அமைத்து கொடுத்தார். படிக்காத அவர் கொண்டுவந்த இந்த திட்டங்கள் அவரின் புத்திகூர்மையினை வெளிக்காட்டியது. 

தமிழக அணைகள் 

மேலும் மின்சாரம் மற்றும் நீர்வளதுறைகள் மீதும் நாட்டம் கொண்டிருந்த அவர் அந்தத்துறையிலும் பல வியக்கதகும் திட்டங்களை கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தினார் அதில் சில திட்டங்கள் ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். 



தேசிய தலைவர் பொறுப்பில் காமராஜர் : 

மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த அவர் பதவியைவிட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் முன்னேற்றத்தினையும் மனதில் வைத்துக்கொண்டு தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அதோடு இளைனர்களின் கையில் நாட்டினை ஒப்படைக்க வேண்டும் என்றும் சிந்தித்தார். அதே ஆண்டு அவர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆனார். அவர் சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரே நியமிக்கப்படும் அளவிற்கு அவரின் செல்வாக்கு கட்சியின் மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காமராஜரின் இறப்பு : 

வாழ்நாளில் பல உதவிகளை மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். 

எளிமையின் மறுமுகம் : 

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார். மேலும் கதர் ஆடையினை மட்டுமே வைத்திருந்தார் . மேலும் அவரது வங்கிக்கணக்கில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வைப்புத்தொகை இல்லை. தனக்காக அனைத்தையும் செய்யும் அரசியல் வாதிகளின் மத்தியில் இப்படி ஒரு அரசியல்வாதி தவறு இப்படி ஒரு தலைவன் கிடைப்பது என்பது மிக அரிதே.!

காமராஜரின் சிறப்பு பெயர்கள் : 

தென்னாட்டு காந்தி 

படிக்காத மேதை 

கர்மவீரர் பெருந்தலைவர் 

கல்விக்கண் திறந்த காமராஜர்

மகாகவி பாரதியார்

  பாரதியார் பிறப்பு மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும்,  1882  ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வ...